லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன், கௌரவ கலாநிதிப்பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்!

இந்தியாவின் டொக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகம் லைக்கா ஹெல்த்தின் தலைவர் திருமதி பிரேமா சுபாஸ்கரனுக்கு கௌரவ கலாநிதிப் பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது.

தெலுங்காணா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன் இந்த கௌரவ கலாநிதிப்பட்டத்தை  வழங்கி  கௌரவித்துள்ளார்.

லைக்கா ஹெல்த்தின் (lyca Health) நிறுவனரும் தலைவருமான திருமதி பிரேமா சுபாஸ்கரன் வைத்தியத் துறைசார் சேவையில் பிரதான இடத்தை தக்கவைத்துள்ளார்.

லைக்கா ஹெல்த்தின் (lyca Health) தலைவரான பிரேமா சுபாஸ்கரன் ஒரு முக்கிய தொழில்முனைவோராகவும், பரோபகாரியாகவும் விளங்குகிறார். வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்களுக்குத் தேவையான மருத்துவ சேவையை அணுகுவதில் குறிப்பாக கவனம் செலுத்துகிறார். 2015 இல் Lyca Health ஐ நிறுவி அதன் தலைவராகவும் தொடர்கிறார்.

பிரேமா சுபாஸ்கரன்  வைத்திய துறைசார்ந்த புதிய சந்தைகளில் விரிவாக்கம் மற்றும் மையங்களின் ஒட்டுமொத்த இயக்கம் உட்பட வணிகத்தின் செயல்பாட்டு மற்றும் மூலோபாய வளர்ச்சியை மேற்பார்வையிடுகிறார்.

2015 ஆம் ஆண்டில் Lyca Health இன் கனரி வார்ஃப் கிளினிக்கை ஆரம்பித்தார். அப்போது லண்டன் மேயராக இருந்த பிரிட்டனின் முன்னாள் பிரதமரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான பொரிஸ் ஜோன்சன்  திறந்து வைத்திரு்தார்.

இதேவேளை  Lyca Health, இலங்கை மாணவர்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இலங்கையில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே நன்கொடை  வழங்கியுள்ளது.

Lyca Group இன் நோக்கத்தின் ஒரு பகுதியாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் இரண்டு வெவ்வேறு திட்டங்களுக்கு LycaHealth இன் நன்கொடை ஆதரவளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.