விபத்தினை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச்சென்ற வர்த்தகர் – தீவிர தேடுதலில் இன்டர்போல்

கொள்ளுப்பிட்டியில் கடந்த சனிக்கிழமை(10) காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த சாரதி விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக சிறிலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரை அழைத்து வருவதற்கு இன்டர்போல் உதவியை காவல்துறை நாடியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

விபத்தினை ஏற்படுத்திவிட்டு டுபாய்க்கு தப்பிச்சென்ற வர்த்தகர் - தீவிர தேடுதலில் இன்டர்போல் | Interpol Help Need Sri Lanka Police Accident

மேலும், விபத்து இடம்பெற்று சில மணித்தியாலங்களுக்குப் பின்னர் சனிக்கிழமை காலை 9.55 மணியளவில் சந்தேக நபர் டுபாய்க்கு சென்றுள்ளார்.

சந்தேகநபர் இலங்கையில் தனது பெயரில் மூன்று Mercedes மகிழுந்துகளை வைத்திருப்பதாகவும், அந்த வாகனங்களுக்கான பணம் டுபாயில் இருந்து பெறப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொள்ளுப்பிட்டியில் இரவு விடுதியில் இருந்து திரும்பிக்கொண்டிருந்த சொகுசு  மகிழுந்து (Mercedes) முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் கஹதுடுவ பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியான 58 வயதுடைய நபரொருவர் உயிரிழந்திருந்தார்.

விபத்து நடந்ததையடுத்து மகிழுந்து சாரதி அங்கிருந்து தப்பியோடினார். விபத்தின் போது மகிழுந்தில் 29 மற்றும் 31 வயதுடைய இரு பெண்களும் இருந்துள்ளனர்.அவர்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மகிழுந்தில் பயணித்த ஏனைய இருவரிடமும் கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். சந்தேகநபரான சாரதிக்கு தெஹிவளை மற்றும் வெல்லம்பிட்டிய ஆகிய இரண்டு முகவரிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவர் கொழும்பு முன்னணி உணவகம் ஒன்றில் சொகுசு அறையில் தங்கியிருந்துள்ளார். சந்தேக நபர் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை 5 மணி வரை களியாட்டங்களில் ஈடுபட்டதாகவும், விபத்து நடந்த போது  மகிழுந்துக்குள் இருந்த பெண்கள் அவரை இரவு விடுதியில் சந்தித்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.