உமா ஓயா திட்டம்: 120 மெகாவாட் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பில் சேர்க்கும்

உமா ஓயா திட்டத்தினூடாக 2023 ஜூன் மாதத்திற்குள் மொத்தமாக 120 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உமா ஓயா திட்டம் தொடர்பாக திட்டத்தில் ஈடுபட்டுள்ள நிர்மாண மற்றும் பொறியியல் நிறுவனத்தின் அதிகாரிகளுடன் சந்திப்பொன்று இடம்பெற்றதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

உமா ஓயா திட்டத்தின் நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிறைவடைந்து 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் என இந்த சந்திப்பின் போது அதிகாரிகள் உறுதியளித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.