இறைச்சிக் கடைகளில் சோதனையை அதிகரிக்க பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தீர்மானம்

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் மற்றும் ஆடுகளின் மரணத்தை கருத்தில் கொண்டு இறைச்சி பரிசோதனைகளை அதிகரிக்க இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.


குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறுகையில், கடந்த சில நாட்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் போது, ​​பல பகுதிகளில் முறையான அனுமதியின்றி மாட்டிறைச்சி மற்றும் ஆட்டு இறைச்சி விற்பனை செய்யப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன, நுகர்வோர் அங்கீகரிக்கப்பட்ட முத்திரையுடனான இறைச்சியை மாத்திரமே கொள்வனவு செய்ய வேண்டுமென சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.