அரசு உதவி பெற 37 இலட்சம் பேர் விண்ணப்பம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற, 37 இலட்சம் பேரிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக, நலன்புரிப் பலன்கள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முழு இலங்கையையும் உள்ளடக்கிய பிரதேச செயலக மட்டத்தில் அரசாங்க உதவியைப் பெறத் தகுதியுள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களை அடையாளம் காண்பதற்கான தகவல்கள் பெறப்பட்டதாகவும், அதன்படி 37 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் நலன்புரிப் பலன்கள் சபை குறிப்பிடுகிறது.

இந்தத் தகவல் சேகரிப்பின் இரண்டாம் கட்டத்தின் கீழ், கள அலுவலர்கள் விண்ணப்பதாரரிடம் சென்று தகவல்களைச் சேகரித்து உறுதிப்படுத்தவுள்ளனர் என மேற்படி சபை தெரிவித்துள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்