யாழிலிருந்து ஆரம்பமானது விமான நிலையத்திற்கான போக்குவரத்து – அறிவிக்கப்பட்டது கட்டண விபரம்!

யாழ்.நகரில் இருந்து பலாலி விமான நிலையத்திற்கு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மீளவும் சேவைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே இந்த போக்குவரத்து சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்-பலாலி இடையேயான போக்குவரத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே தற்போது இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழிலிருந்து ஆரம்பமானது விமான நிலையத்திற்கான போக்குவரத்து - அறிவிக்கப்பட்டது கட்டண விபரம்! | Jaffna International Airport Palaly Ctb Bus Sl

திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் சென்னை விமான நிலையத்திலிருந்து புறப்படும் விமானம், முற்பகல் 10.50 மணிக்கு பலாலி விமான நிலையத்தை வந்தடையும். பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து, 11.50 மணிக்கு சென்னை நோக்கிப் புறப்படும்.

இந்த விமான சேவை பயணிகளுக்காகவே யாழ்.நகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய தினங்களில் காலை 8 மணிக்கு பலாலி விமான நிலையம் நோக்கி பேருந்து சேவை இடம்பெறும்.

அதேபோன்று நண்பகல் 12 மணிக்கு பலாலி விமான நிலையத்தில் இருந்து யாழ்.நகர் நோக்கி பேருந்து சேவை இடம்பெறும். தேவை ஏற்படின் ரயில் நிலையம் வரையிலும் சேவை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பயணிக்கும் பயணிகளுக்கான ஒரு வழிக் கட்டணமாக 500 ரூபா அறவிடப்படும். மேலும் பயணப் பொதி ஒன்றுக்கு 200 ரூபா அறவிடப்படும். இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு யாழ்.மாவட்ட பேருந்து நிலைய பொறுப்பதிகாரியின் 0765378432 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என வட மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபை தலைவர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.