பிரிந்து சென்ற கணவரால் தாக்கப்பட்ட 6 வயது குழந்தை உயிரிழப்பு!!
பிரிந்து சென்ற கணவரால் தாக்கப்பட்ட 6 வயது குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான குழந்தை இன்று (13) காலை கம்பஹா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக கம்பஹா காவல்துறையினர் தெரிவித்தனர்.
கம்பஹா, பஹல்கம பகுதியைச் சேர்ந்த இந்துனில் சதுரங்க என்ற சிறு குழந்தையே இவ்வாறு தாக்குதலில் பலியாகியுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கம்பஹா காவல்துறையின் இரவு நேர நடமாடும் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பஹல்கம பிரதேசத்தில் குழந்தை தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற காவல்துறை அதிகாரிகள் குழந்தையை கம்பஹா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும், குழந்தையின் தாயாரின் பிரிந்த கணவனான சந்தேக நபர் கம்பஹா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கம்பஹா தலைமையக பிரதான காவல்துறை பரிசோதகர் அகில ரணசிங்கவின் மேற்பார்வையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
கருத்துக்களேதுமில்லை