சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலய பாடசாலை கீதம் இருவெட்டு வெளியீடு…

இன் நிகழ்விற்கு வருகை தந்த கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப், M.S.சஹதுள் நஜிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு அதிதிகளாக கல்முனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு. எஸ். சரவணமுத்து, கல்முனை மாநகர சபை உறுப்பினர் திரு. K. செல்வராஜ், (அதிபர்)திரு. B.சசிந்திரன்,பழைய மாணவர் சங்க உறுப்பினர் திரு. கஜானந்தன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்ட அனைவரையும் மலர்மாலை அணிவித்து பேண்டு வாத்தியத்துடன் வரவேற்கப்பட்டனர்.

மேலும் மாணவர்களின் கலை நிகழ்வுகள், பாடசாலையின் கீதம் இருவெட்டு வெளியீடானது பாடகர் திரு.எஸ்.கஜன் அவர்களினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து பாடசாலையை விட்டு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்கள் மற்றும் நலன்விரும்பிகளுக்கான நினைவுச் சின்னம் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.

மேலும் நிகழ்வுகளில் பாடசாலையின் அதிபர்,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள்,கல்வி சாரா உத்தியோகத்தர்கள், மாணவர்கள் ஏன பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்