மட்டக்களப்பில் பல வீடுகளை உடைத்து கொள்ளை – இருவரை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை !

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ள 2 கொள்ளையர்கள் சிசிரி கமராவில் பதிவாகியுள்ளனர் எனவே இவர்கள் தொடர்பாக அடையாம் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தெலைமையக பொலிஸ் நிலையத்துக்கே அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு மட்டு தலைமைய பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 29 ம் திகதி மட்டுதலைமையகமு; காத்தான்குடி ,களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுகிலுள்ள பூட்டியிருந்த 4 வீடுகளை ஒரு தினத்தில் 9 மணித்தியாலயத்தில் உடைத்து அங்கிருந்து 28 பவுண் தங்க ஆபரணங்கள் 2 இலச்சத்து 83 ஆயிரம் ரூபா பணம் மடிகளனி மணிக்கூடு போன்ற பெறுமதியான பொருட்கள் கொள்ளையர்கள் கொள்ளையிட்டுள்ளனர்.

இந்த திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள சிசிரி கமராவில் திருடர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களை தேடி பொலிசார் விசாரணைகள் முடகிகிவிடப்பட்டுள்ளதுடன் அவர்கள் தொடர்பாக அடையானளம் தெரிந்தவர்கள் உடனடியாக குறித்த பொலிஸ் நிலையங்களுக்கு அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு பொலிசார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.