கராத்தே போட்டியில் பதக்கங்கள் வென்ற யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தர்.

2022 மெய்ஜி கோப்பை (MEIJI CUP – 2022) இலங்கை ஓபன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2022.12.11 அன்று வென்னப்புவ சர் ஆல்பர்ட் எஸ். பீரிஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்
T. பிரசாத் கலந்து கொண்டு 01 தங்க பதக்கத்தையும் 01 வெள்ளி பதக்கத்தையும் பெற்று இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கும் பெருமையை தேடிதந்துள்ளார்.

இச் சாதனைகளை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் திரு.துஷார உபுல்தெனிய சிறைச்சாலை கராத்தே அணியினருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

அத்தோடு யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு இன்று 14/12/2022 யாழ் சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்