அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு; லங்கா சதொச நிறுவனம்

நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

லங்கா சதொச நிறுவனம் குறித்த விலைக்குறைப்பை அறிவித்துள்ளது.

இதன்படி, 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில், சிவப்பு பருப்பு, கோதுமை மா, வெள்ளைப்பூண்டு, வெங்காயம் மற்றும் உள்ளூர் மீன் ரின் ஆகியவற்றின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் சடுதியாக குறைப்பு; லங்கா சதொச நிறுவனம் | Lanka Sathosa Reduce Price Commodity Sri Lanka

குறித்த விலைக் குறைப்பின் படி, கோதுமை மா கிலோகிராம் ஒன்றின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 250 ரூபாவாக உள்ளது.

சிவப்பு பருப்பு கிலோகிராம் ஒன்றின் விலை 4 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 385 ரூபாவாக உள்ளது.

வெங்காயம் கிலோகிராம் ஒன்றின் விலை 9 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 190 ரூபாவாக உள்ளது.1 கி.கி வெள்ளைப் பூண்டின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 460 ரூபாவாக உள்ளது.

இதேவேளை, உள்ளூர் மீன் ரின் ஒன்றின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், இதன் புதிய விலை 490 ரூபாவாக உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.