வேலை முடிந்து வீடு திரும்பியவருக்கு நேர்ந்த அவலம்….!

பேருவளை, பந்தனகொட பிரதேசத்தில் உந்துருளி மரத்தில் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (13) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பேருவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் களுத்துறை போதனா வைத்தியசாலையின் பராமரிப்புப் பிரிவில் தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றிய திருமணமாகாத 41 வயதுடைய கெமுனு மங்கள ஜயரத்ன என்பவராவார்.

வேலை முடிந்து வீடு திரும்பியவருக்கு நேர்ந்த அவலம்....! | Accident Death In Beruwala Died Moter Cycle

வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் உந்துருளி வீதியை விட்டு விலகி பந்தனகொட பிரதேசத்தின் பிரதான வீதிக்கு அருகில் இருந்த பலா மரத்தில் மோதியுள்ளது.

 

வேலை முடிந்து தனது நண்பரை வீட்டில் இறக்கிவிடுவதற்காக செல்லும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், விபத்தில் நண்பரும் பலத்த காயமடைந்துள்ளார் எனவும் விபத்து நடந்த பகுதி மிகவும் வளைவுகள் நிறைந்த பகுதி எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்