மின்மானி மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு சாதனங்களை இறக்குமதி செய் தேவையான டொலர் இல்லை என நளிந்த இளங்ககோன் தெரிவிப்பு!!

மின்மானி மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனால், புதிய மின் இணைப்பு பெற, வைப்பு செய்த மின் நுகர்வோர் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

டொலரை கண்டுபிடிக்க வழி இல்லை -கடும் நெருக்கடியில் இலங்கை மின்சாரசபை | Sri Lanka Electricity Board Under Severe Pressure

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் [விநியோகப் பிரிவு ரொஹான் செனவிரத்ன, மின்மானி மற்றும் கம்பிகள் மட்டுமன்றி மின்மாற்றிகளுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.

300 முதல் 400 மின்மாற்றிகள் தேவை என்றும், தற்போது 100க்கு மேல் மட்டுமே உள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்த சாதனங்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்களை கண்டுபிடிக்க முடியாத காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். எனினும், இம்மாதம் 6000 மின்மானிகள் இறக்குமதி செய்யப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.