ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் மஹா யாகம்…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரது 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கை இந்துக் குருமார்களினால் நடார்த்தப்படும் மஹா யாகம் நிகழ்வானது இன்று புதன்கிழமை அதிகாலை 5 .00மணி முதல் காலை 7 மணி வரை
பெரிய நீலாவணை ஸ்ரீ மஹா விஷ்ணு வேதஸ்தானத்தில் சிவஸ்ரீ பத்ம லோஜ சிவம் குருக்கள் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு வே ஜெகதிஸன் அவர்களும் , இந்து குருமார்கள்,ஆலயதர்மகர்த்தாக்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இவ் ஏற்பாடுகளை அம்பாரை மாவட்ட இந்து சமய கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு கு.ஜெயராஜி மேற்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்