குத்தகை நிலுவைக்காக வாகனங்களை கொண்டு செல்லும் நிறுவனங்கள் – வெளியாகிய எச்சரிக்கை

குத்தகை (லீசிங்) நிலுவைத் தொகை காரணமாக வாகனங்களை பலவந்தமாக கொண்டு செல்லும் நிறுவனங்களுக்கு சிக்கலான நிலை உருவாகியுள்ளது.

அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

நிதி இராஜாங்க அமைச்சரின் பணிப்புரை கடந்த நாட்களில் அவ்வாறு பலவந்தமாக வாகனங்களைக் கையகப்படுத்தும் செயற்பாடுகளின் போது குத்தகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுக் கொண்டிருந்த பலர் தாக்குதலுக்கு இலக்காகியிருந்ததாக தெரியவருகிறது.

 

குத்தகை நிலுவைக்காக வாகனங்களை கொண்டு செல்லும் நிறுவனங்கள் - வெளியாகிய எச்சரிக்கை | Forcibly Repossess Vehicles For Lease Sri Lanka

அவ்வாறான விடயங்கள் பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பை சம்பாதித்திருந்த நிலையில் குறித்த செயற்பாடுகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.