ஜனாதிபதி, இந்திய கடற்படைத் தளபதி பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இந்திய கடற்படை தளபதி அட்மிரல் ஹரி குமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியும் இந்திய கடற்படைத் தளபதியும் பரஸ்பர ஆர்வமுள்ள பல விடயங்களையும் விவாதித்துள்ளனர்.

இதேவேளை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கொழும்பு பாதுகாப்பு மாநாட்டை வழிநடத்துவதில் இலங்கையின் பங்கும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்