குத்துச்சண்டை சாம்பியன் கடத்தப்பட்டு தாக்குதல் !

குத்துச்சண்டை சாம்பியன் தினுஷா லக்ஷன் இனம்தெரியாத கும்பல் ஒன்றால் கடத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க ப்பட்டுள்ளார். கண்டி, ஆஸ்பத்திரி லேனில் உள்ள தனது வீட்டில் தினுஷா லக்ஷன் உறங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்கு வந்த ​​ஒரு நபர் அவரை வெளியே அழைத்துச் சென்றதாக தினுஷா லக்ஷனின் தாயார் தெரிவித்துள்ளார்.
நீண்ட நேரமாகியும் மகன் விடு திரும்பவில்லை என்றும்
மகனின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது அதுவும் வேலை செய்யாததால், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இணைந்து தே டுதலில் ஈடுபட்டதாகவும் அவரது தாயார் தெரிவித்துள்ளார். இந்த தேடுதலின் போது ஹந்தானை விண்ட் ஸ்டேடியம் பகுதியில் அவர் தாக்கப்பட்டு கிடந்த நிலையில் அவரை மீட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது

இதையடுத்து அவர் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், சில பாதுகாப்புப் படையினரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தமக்குக் கூறப்பட்டதாகவும் லக்ஷனின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்