கத்தி குத்தில் ஈடுபட்ட பிக்கு – வாக்குவாதம் முற்றிய நிலையில் விபரீதம்

கண்டி பேராதனை சுபோதாராமய குருக்குலத்தில் வசிக்கும் இரண்டு பிக்குமாருக்கு இடையில் நேற்று மாலை ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஒரு பிக்கு மற்றுமொரு பிக்குவை கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தி குத்துக்கு இலக்கான பிக்கு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கத்தியால் குத்திய பிக்குவை பேராதனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில் நடந்துள்ளது.

 

கத்தி குத்தில் ஈடுபட்ட பிக்கு - வாக்குவாதம் முற்றிய நிலையில் விபரீதம் | Fight Between Monks Ended Stabbing Incident

கொஸ்வத்தே சிறிதம்ம தேரர் என அழைக்கப்படும் 16 வயதான பிக்கு 24 வயதான இஹலகம தம்மஜித் என்ற தேரரை கத்தியால் குத்தியுள்ளார்.

கத்தி குத்துக்கு இலக்கான பிக்கு கண்டி வைத்தியசாலையில் 17வது விடுதியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இளம் பிக்குவை பேராதனை காவல்துறையினர் நேற்றிரவே கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேராதனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்