ஆரம்பமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று(16) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சட்டப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தற்போது இறக்குமதி செய்யப்பட்டவுள்ள 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், அதற்கான கொடுப்பனவுகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

 

ஆரம்பமான சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் - வாகன உரிமையாளர்களுக்கு காத்திருக்கும் மகிழ்ச்சி செய்தி | Petrol Corporation Sri Lanka Sapukaskandha Active

மேலும், சுத்திகரிப்பு நிலையத்தின் தொட்டி வளாகத்திற்கு கச்சா எண்ணெய் இறக்கும் பணியும் ஆரம்பமாகியுள்ளது. எதிர்காலத்தில் சுத்திகரிப்பு நிலையத்தின் நிலையான உற்பத்தியைப் பேணுவதற்காக மேலும் 90,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்குத் தேவையான கொள்முதல் நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளதாகவும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, முழு கொள்ளளவு கொண்ட சுத்திகரிப்பு உற்பத்தி செயல்முறையிலிருந்து, 1600 மெட்ரிக் தொன் டீசல், 550 மெட்ரிக் தொன் பெட்ரோல், 950 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் மற்றும் 1450 மெட்ரிக் தொன் விமான எண்ணெய்450 அளவிலான எண்ணெயை உற்ப்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை முழு வீச்சில் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு விரைவில் சுமுகமான தீர்வு எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் அசோக ரங்வல தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்