மட்டக்களப்பு வாவி மீனவர்கள் மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் – பிள்ளையான் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வாவியை நம்பி மீனவத் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தங்களது தொழில்களை கைவிட்டு மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

மீனவத் தொழிலாளர்களின் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் முகமாக 20 தோணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், வறுமை காரணமாக அதிகளவான இளைஞர் யுவதிகள் நாட்டை விட்டு வெளியேறுவதாகவும், மீனவர்கள் மிகவும் துன்பப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் அறிய முடிகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான தோணிகள் காணப்படுகின்ற போதிலும், மீன் வளங்கள் குறைந்து காணப்படுகின்ற காரணத்தினால் மீனவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தெரிய வருகின்றது.

ஆகவே மட்டக்களப்பு வாவி மீனவர்கள் வாவியை நம்பி இருக்காமல் மாற்று நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.