திலினி பிரியமாலி தொடர்பில் கோட்டை நீதவான் விடுத்த அதிரடி உத்தரவு
பாரிய பண மோசடி தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திகோ குழுமத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவு இன்றையதினம்(16) கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகேவினால் பிறப்பிக்கப்பட்டது.
மேலும், ஐம்பதாயிரம் ரூபா ரொக்கம் மற்றும் 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் சந்தேகநபரை விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், சந்தேகநபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 12 மணி வரை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்நிலையாகுமாறு நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், வெளிநாட்டு பயணத்தடை தொடர்பான உத்தரவை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறு கொழும்பு நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை