வடமராட்சி வல்லைப் பகுதியில் சோளார் மின் விளக்குகள், அவை பொருத்தப்பட்டிருந்த கம்பங்களோடு திருட்டு

யாழ். வடமராட்சி பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பகுதியில் கரவெட்டி பிரதேச சபையால் பொருத்தப்பட்ட 5 சோளார் மின் விளக்குகள் அவை பொருத்தப்பட்டிருந்த மின் கம்பங்களோடு திருடப்பட்டுள்ளன.


சுமார் தலா 1லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியில் இவை பொருத்தப்பட்டுள்ள நிலையில் அவை அறுத்தெடுத்து கொண்டு செல்லப்பட்டுள்ளன.

மின் விளக்குகள் பொருத்தப்பட்ட இடத்துக்கு அண்மையில் இராணுவ முகாம் ஒன்று அமைந்துள்ள நிலையில் அவர்களும் இத்திருட்டை கண்காணிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்