நாட்டின் எரிசக்தி தேவைகள் குறித்து இலங்கை-ரஷ்யா கலந்துரையாடல்

எரிசக்தித் துறையில் இலங்கையின் தேவைகள் குறித்து இலங்கையும் ரஷ்யாவும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக இலங்கைக்கான ரஷ்யத் தூதரகம் தெரிவித்துள்ளது.


இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் Levan Dzhagaryan நேற்று (15) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை சந்தித்ததாக தூதரகம் தெரிவித்துள்ளது.

“இலங்கையின் எரிசக்தித் துறையின் தேவைகளான எரிபொருள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள், நிலக்கரி வழங்கல் மற்றும் அணுசக்தியில் ஒத்துழைப்பு போன்றவை குறித்து இந்தச் சந்திப்பில் கவனம் செலுத்தப்பட்டது” என ரஷ்யத் தூதரகம் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டில் மின்சாரம் மற்றும் எரிபொருள் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை இலங்கை அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் விநியோகத்துக்குத் தேவையான நிலக்கரி மற்றும் எரிபொருளை வாங்குவதற்கு அந்நியச் செலாவணி பற்றாக்குறை மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்