மக்கள் இன்னும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கின்றனர் – பேராசிரியர். ரஞ்சித் பண்டார

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எவராலும் சவால் விட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் பரந்த கூட்டணியில் போட்டியிட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் சுமார் 15 கட்சிகள் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் கூற்றுக்கள் இருந்தபோதிலும், அவர்களுக்கு நாட்டிற்கான வேலைத்திட்டம் இல்லை அல்லது மக்களின் ஆதரவு இல்லை என்பது தெளிவாகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

கட்சியின் சித்தாந்தங்கள் கூறப்படுகின்ற போதிலும், 1977 ஆம் ஆண்டு முதல் நாட்டை ஆட்சி செய்த அனைத்து கட்சிகளும் பொருளாதாரத்தை தாராள மயமாக்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

காலங்காலமாக, முன்னாள் எதிரிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவதை நாடு காணக்கூடியதாக உள்ளதாகவும், எனவே எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னால் அது வேறு விதமாக இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.