முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் கைது !
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஜனாதிபதி ஊடகப் பணிப்பாளர் நாயகமாக இருந்த சுதேவ ஹெட்டியாராச்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா இதனைத் தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் கண்டியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியமை, வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் வழியை மறித்தமை மற்றும் பொலிஸ் உத்தரவை மீறி வாகனம் செலுத்தியமை ஆகிய காரணங்களுக்காக அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை