தினேஷ் ஷாஃப்டர் கொலை: முன்னாள் வர்ணனையாளருக்கு பயணத் தடை விதிப்பு

பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாஃப்டரின் கொலை தொடர்பான விசாரணைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வர்ணனையாளர் ஒருவர் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல நேற்று மாலை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அவரிடம் இரண்டு கடவுச்சீட்டுகள் இருப்பதாகவும், இரண்டு ஆவணங்களுக்கும் வெளிநாட்டுத் தடை பொருந்தும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விசாரணை அறிக்கையைத் தொகுக்க, தினேஷ் ஷாஃப்டரின் கையடக்கத் தொலைபேசியின் அழைப்புப் பதிவுகளின் விபரங்களை சமர்ப்பிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு பொரளை பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்