பொதுஜன வாக்கெடுப்பின்றிய திருத்தங்களை தமிழ்த்தரப்பு ஏற்றுக்கொண்டால் அது தமிழருக்கான அடிமை சாசனம்!

தமிழர் தாயகத்தில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றுள்ள நிலையில் எந்த முடிவுகளை எடுப்பதானாலும் மக்களுடைய அனுமதி தேவை.

பொதுஜன வாக்ககெடுப்பிற்கு விடப்பட வேண்டும் என தமிழ்த்தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தள்ளார்.

நேற்றைய தினம் வல்வெட்டித்துறையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“தமிழருக்கான தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இந்தியா அமெரிக்க போன்ற நாடுகள் இருக்க வேண்டும். இவை தான் எமது கோரிக்கையும்.

இவ்வாறான நிலையில் மிகப்பெரிய இனப்படுகொலை இ்ம்பெற்றுள்ள நிலையில் மக்களுக்கு என்ன தேவை என்பதை நாம் யாரும் தீர்மானிக்க கூடாது, மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

பொதுஜன வாக்கெடுப்பின்றிய திருத்தங்களை தமிழ்த்தரப்பு ஏற்றுக்கொண்டால் அது தமிழருக்கான அடிமை சாசனம்! | Economic Crisis International Independence Day Sl

மேலும் இந்தியாவின் மத்தியஸ்தம் வேண்டும் என்று நாம் கேட்டால் பெரும்பான்மையினர் குழம்பிவிடுவார்கள் என்றால் எதற்கு? தமிழர் அடிமை வாழ்க்கை வாழ்வதா?

ஆகவே பொதுஜன வாக்கெடுப்பின்றி எதாவது ஒரு தீர்மானத்தை தமிழ்த்தரப்பு ஏற்றுக்கொள்ளுமானால் அது தமிழருக்கான அடிமை சாசனம்.

அதேவேளை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் சர்வதேசத்தை சமாளிக்கக்கூடியதுமான மிகப்பெரிய உத்தியாகவே அடுத்த சுதந்திர தினத்திற்குள் தீர்வு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அடுத்த சுதந்திர தினத்திற்கு முன்னர் தீர்வு கிடைக்காது என்ற சந்தர்ப்பத்தில் தமிழ்க் கட்சிகள் அடுத்து என்ன செய்யப் போகின்றன? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

எவ்வாறாயினும் சிவாயிலிங்கம் அங்கம் வகிக்கும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணின் சார்பில் அதன் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் அதிபருடனான சந்திப்பில் கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.