நாட்டைவிட்டு வெளியேரும் விமான கட்டுப்பாட்டாளர்கள் – அதிகரிக்கும் ஊழியர் தட்டுப்பாடு

இலங்கையில் உள்ள 38 விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் காரணமாக அண்மையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலை துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

வேறு நாடுகளில் உள்ள சிவில் ஏவியேஷன் நிறுவனங்கள் வழங்கும் அதிக சம்பளம் மற்றும் வசதிகள் காரணமாக அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டைவிட்டு வெளியேரும் விமான கட்டுப்பாட்டாளர்கள் - அதிகரிக்கும் ஊழியர் தட்டுப்பாடு | Thirtyeight Airtraffic Controllers Leaving Sl

இந்நிலைமை காரணமாக இலங்கையில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இது இன்று நாட்டின் அனைத்து துறைகளிலும் காணப்படும் பொதுவான பிரச்சினையாக உள்ளது என தெரிவித்தார்.

மேலும், இருபத்தைந்து புதிய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பணியமர்த்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் பல விமானிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.