திடீர் விசாரணைக்குள்ளாகவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் காணாமல் போனோர் அலுவலகத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று , புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், மாந்தை கிழக்கு உள்ளிட்ட ஐந்து பிரதேச செயலாளர் பிரிவுகளை சேர்ந்த 244 பேருக்கே இவ்வாறு விசாரணைக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் 19.12.2022 அன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 29 பேருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 16 பேருக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 37 பேருக்கும்,துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 32 பேருக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 08 பேருக்குமாக 122 பேருக்கும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்வுள்ளன.

திடீர் விசாரணைக்குள்ளாகவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்! | Srilanka Missing Person Investigation Mullaitvu

மேலும், 20.12.2022 அன்று கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 10 பேருக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 28 பேருக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 39 பேருக்கும்,துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 32 பேருக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 13 பேருக்குமாக 122 பேருக்குமாக மொத்தமாக 244 பேருக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.