வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த நபரின் சடலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது..

அண்மையில், கப்பல் மூலமாக
கனடா செல்ல முற்பட்டிருந்த நிலையில் வியட்நாம் நாட்டில் மரணமடைந்த, சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரனின் சடலம் சற்று முன்னர் விமானம் மூலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தற்போது நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன்,
அதன் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை இறுதிக்கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி கல்வயலில் உள்ள அவரின் வீட்டில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.