1,000 அரச பாடசாலைகளுக்கு இணைய வசதி அரசாங்கம் ரூ 1,000 மில்லியன் ஒதுக்கீடு

பின்தங்கிய பகுதிகளில் உள்ள 1,000 அரச பாடசாலைகளுக்கு இணைய வசதியை வழங்க ரூ. 1,000 மில்லியன்களை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது

கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் கல்வியை டிஜிட்டல் மயமாக்கும் கருத்தின் கீழ் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த திட்டம் தொடங்கப்படும்.

வடமேல் மாகாண பாடசாலை அதிபர்கள் கூட்டம் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போது குருநாகல் மாவட்ட சிரேஷ்ட கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம் பாலசூரிய இத்தகவலை தெரிவித்தார்.

வருங்கால சந்ததியினருக்கு போதையில்லா நாடு உருவாக்கப்படும் என்றும், போதைக்கு அடிமையான இளைஞர்களுக்காக முன்னணி பாடசாலைகளில் சுமார் 10,000 கருத்தரங்குகள் அடுத்த மூன்று மாதங்களில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

அரச பாடசாலைகளில் உள்ள காலிப் பணியிடங்களைப் பொறுத்து அடுத்த ஆண்டு மார்ச் 24-ஆம் திகதிக்குப் பிறகுதான் இடைப்பட்ட வகுப்புகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்