ஒரு அறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்க தனுஷ்க குணதிலகவுக்கு நீதிமன்றம் அனுமதி

பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு அறை அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற சிட்னி மாஜிஸ்திரேட் கோர்ட் மாஜிஸ்திரேட் கிளாரி பெர்னான் அனுமதி அளித்துள்ளார்.

தனுஷ்க குணதிலக்க நேற்று (16) நீதிமன்றத்தில் ஆஜராகிய போது, அவர் சார்பில் நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

குணதிலகவுக்கு உதவ முன்வந்த ஒருவரின் வீட்டில் தற்காலிகமாக வசிப்பதால் குணதிலகவை புதிய வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.

அந்த கோரிக்கையை பரிசீலித்த சிட்னி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் குணதிலகவை புதிய வீட்டிற்கு செல்ல அனுமதித்துள்ளது.

இந்த வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.