யாழ் கற்கோவளம் கடலில், 140 பேருடன் தத்தளித்த படகு மீட்பு!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடலில், 140 பேருடன் தத்தளித்துக் கொண்டிருந்த படகு மீட்கப்பட்டு, காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மியன்மாரில் இருந்து இந்தோனேசியா செல்வதற்காக சிறுவர்கள் உட்பட 140 பேருடன் வந்த அகதிகள் கப்பல் வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்பகுதியில் கடற்படையால் இடைமறிக்கப்பட்டது. இதனை அடுத்து அங்கு விசாரணை நடாத்தப்பட்டு கடற்படையின் இரண்டு டோறா படகுகள் அகதிகள் படகிற்கு பாதுகாப்பு வழங்க காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்