சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தால் ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவர் கைது.

சாவகச்சேரி நிருபர்
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புத்தூர்ச்சந்தி-தட்டாங்குளம் பகுதியில் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தால் 16/12 வெள்ளிக்கிழமை காலை ஹெரோயின் போதைப்பொருளுடன்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாவட்ட உதவி மதுவரி ஆணையாளர் ரொஷான் பெரேராவின் வழிநத்தலிலின் கீழான சாவகச்சேரி மதுவரிப் பரிசோதகர் ரசிகரன் தலைமையிலான குழுவினர் குறித்த கைது நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 2550மில்லிக்கிராம் ஹரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் 16/12 வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி யூட்சன் முன்னிலையில் நிறுத்தப்பட்ட நிலையில் 14தினங்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்