கொடிகாமம்-வரணியில் இரு ஆலயங்களில் திருட்டு.

சாவகச்சேரி நிருபர்

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப் பகுதியில் உள்ள இரண்டு ஆலயங்களில் 14/12 புதன்கிழமை இரவு திருட்டு இடம்பெற்றிருப்பதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் ஆலய நிர்வாகத்தினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வரணி-குடமியனில் அமைந்துள்ள ஐயப்ப ஆலயத்தில் இரண்டு பவுண் நகை திருடப்பட்டதுடன்-உண்டியலும் உடைக்கப்பட்டிருப்பதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.அதேசமயம் வரணி-இயற்றாலை பகுதியில் அமைந்துள்ள புற்றுக் கோவில் உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை கொடிகாமப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.