சர்வதேச ரோட்டரிக் தலைவரின் வருகையை முன்னிட்டு முத்திரை வெளியீடு.

சாவகச்சேரி  நிருபர்
சர்வதேச ரோட்டரிக் கழகத் தலைவரும்-ரோட்டரிக் கழகத்தின் முதல் பெண் தலைவியுமான ஜெனிபர் ஜோன்சன் 14/12 புதன்கிழமை கொழும்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கையில் உள்ள ரோட்டரிக் கழகங்களின் அங்கத்தவர்களைச் சந்தித்திருந்தார்.
கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலில் ரோட்டேரியன் புகுது டீ சொய்சா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சர்வதேச ரோட்டரிக் கழகத் தலைவரின் வருகைக்கான நினைவுச் சின்னமாக 50ரூபாய் பெறுமதியான முத்திரை வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்