மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்..! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் காலநிலையில் தாக்கம் செலுத்திய மாண்டஸ் சூறாவளி பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூறாவளி தாக்கத்தால் சமீப நாட்களில் நாடு முழுவதும் ஒரு குளிர் காலநிலை ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் வலுவடைந்தது. இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உட்பட இலங்கையின் சில இடங்களில் கடும் மழை பெய்தது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் திடீரென சூறாவளியுடன் காற்றின் தோற்றம் ஏற்பட்டது.

இந்த சூறாவளி திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் சீரற்ற காலநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் சூறாவளி ஏற்படும் அபாயம்..! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Weather Today Sri Lanka

 

இந்நிலையில் நாட்டில் 22 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலநிலையில் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை அந்தமான் தீவைச் சூழவுள்ள நிலைமை தற்போதும் காணப்படுவதாகவும், காற்றழுத்தத் தாழ்வு நிலை சிறிதளவு வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த நாட்களில் மழை அதிகரிக்குமா அல்லது சூறாவளி ஏற்படுமா என்பது உறுதி செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இது சூறாவளியாக மாறி இலங்கையை பாதிக்குமா என்பதை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

எனினும் அவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். வளிமண்டளவியல் அமைப்பு மற்றும் வழித்தடத்தில் உள்ள நீராவியின் அளவைப் பொறுத்தே அனைத்தும் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்