அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்பு!

இலங்கையில் இரு வேறு இடங்களில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சடலங்களை காவல்துறையினர் இன்று(18) மீட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

களனி ஆறு மற்றும் இரத்தினபுரி கலவான ஆகிய இடங்களிலேயே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 

 

அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் மீட்பு! | Two Unidentified Bodies Found Sri Lanka Police

களனி ஆற்றில் மிதந்து வந்தநிலையில் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி கலவான பிரதேசத்தில் மற்றுமொரு சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்