ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் 200 வது அகவை நிறைவினை முன்னிட்டு காரைதீவில் குருபூசை தினநிகழ்வு…

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் 200 ஆவது அகவை நிறைவினை முன்னிட்டு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் “குரு பூஜையும் விழாவும்”
இன்றைய தினம் 18.12.2022 காலை 8.30 மணியளவில் காரைதீவு
சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணி மண்டபத்தில் காரைதீவுபிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் தலைமைஇடம்பெற்றது.

இன் நிகழ்விற்கு திரு முன்னிலை அதிதியாக சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரன் குருக்கள்
ஸ்ரீ கண்ணகையம்மன் ஆலயம் காரைதீவு,

பிரதம அதிதியாக திரு.வே.ஜெகதீஸன்
மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ சாந்தரூபன் குருக்கள் (வீரபத்திரர் சுவாமி ஆலயம் காரைதீவு)
சிவஸ்ரீ மகேஸ்வர குருக்கள் நந்தவன சித்தி விநாயகர் ஆலயம் காரைதீவு,
சிவஸ்ரீ ந.பத்மலோஜசிவம் மகாவிஷ்ணு தேவஸ்தானம் பெரிய நீலாவணை,
சிவஸ்ரீ சுபாஸ்கர சர்மா முருகன் ஆலயம் நாவிதன்வெளி,

சிறப்பு அதிதிகள்
திரு.ஆ.சஞ்சீவன் (பிரதிக்கல்விப் பணிப்பாளர் கல்முனை)
திரு.வி.ரி.சகாதேவராஜா (உதவிக்கல்விப் பணிப்பாளர், சம்மாந்துறை)
விசேட அதிதிகளாக
திரு.இரா.குணசிங்கம் தலைவர் அறங்காவலர் ஒன்றியம் காரைதீவு,
திரு பா.கந்தசாமி செயலாளர் ஆலையடிப்பிள்ளையார் ஆலயம் பொத்துவில்,
திரு.க.இராஜரெத்தினம் பணிப்பாளர் திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் – திருக்கோவில்,
திரு.யோ.கஜேந்திரா தலைவர் சிவநெறி அறப்பணி மன்றம் – கல்முனை
மேலும் அதிதிகளை வரவேற்றல்
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்தல்
புஸ்பாஞ்சலி, தீபாராதனையும் ,நந்திக் கொடியேற்றல், அதனைத் தொடர்ந்து

2ம் கட்ட நிகழ்வுகளாக
மங்கள விளக்கேற்றல் குருபூசை, தேவாரம் இசைத்தல், அறநெறிக்கீதம், வரவேற்பு நடனம்,
வரவேற்புரை திருமுன்னிலை அதிதி உரை தலைமை உரை
அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பேச்சு,பண்ணிசை,கதாப்பிரசங்கம்,வில்லுப்பாட்டுஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து பிரதம அதிதி உரை,கெளரவிப்பு
பரிசுகள் வழங்குதல்,நன்றி உரை மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் திரு.கு. ஜெயராஜ் அவர்களினால் இடம் பெற்றந்தினைத் தொடர்ந்து அன்னதான நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.