நற்பிட்டிமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்து பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாரட்டி கெளரவிக்கும் நிகழ்வு….

நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் எமது நற்பிட்டிமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்த 2022 கா. பொ. த. சாதாரண தர /கா.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்று பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை பாரட்டி கெளரவிக்கும் நிகழ்வானது இன்று 18/12/2022 பிற்பகல் 4.00 மணியளயில்
நற்பிட்டிமுனை ஸ்ரீ கணேசர் ஆலயம் மற்றும் நற்பிட்டிமுனை பத்திரகாளி அம்மன் ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு.த.ரவிராஜ் அவர்களின் தலைமையில் நற்பிட்டிமுனை கமு/சிவசக்தி மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.

மேலும் இன் நிகழ்வில் ஆன்மிக அதிதியாக சிவஸ்ரீ சுதர்சன் குருக்கள் அவர்களும் பிரதம அதிதியாக கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு.எஸ். சரவனமுத்து அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு அதிதிகளாக கமு/சிவசக்தி மகாவித்தியாலய அதிபர் திரு.தி.கண்ணபிரான், ஓய்வு பெற்ற கூட்டுறவு உதவி ஆணையாளர் திரு.வ.குலசேகரம், நற்பிட்டிமுனை இந்து இளைஞர் மன்ற தலைவர் திரு.கோ.சர்மா,
மேலும் நற்பிட்டிமுனை ஆலயங்களின் பிரதிநிதிகள்,இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், நற்பிட்டிமுனை அறநெறிப் பாடசாலையின் அதிபர்,பெற்றோர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் ஏன பலரும் கலந்து சிறப்பித்தர் இன் நிகழ்வுகளை ஆலய பரிபாலன செயலாளர் திரு.லோ.பிரேமகாந் ஆசிரியர் அவர்கள் நிகழ்வினை தொகுத்து வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.