பாடசாலை மாணவியை போதை வழங்கி வன்புணர்விற்குட்படுத்திய உயர்தர மாணவன்!

மட்டக்களப்பில் பாடசாலை மாணவியை வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் இருவரை சம்பவம் தொடர்பில் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவியை போதை வழங்கி வன்புணர்விற்குட்படுத்திய உயர்தர மாணவன்! | Rape Of School Girl Giving Drugs

குறித்த பாடசாலை மாணவிக்கு போதைப்பொருளை வழங்கி, பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாணவியின் காதலன் என குறிப்பிடும் ஒருவரும் அவரின் நண்பரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.