இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான காலநிலை அறிவித்தலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அந்தவகையில், நாட்டில் இன்றும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்றைய காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு! | Weather Update Sri Lanka Meteorology Department

கிழக்கு, ஊவா, தென், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் அல்லது இரவு வேளைககளில், நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இதேவேளை, நாட்டின் ஏனைய பகுதிகளில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையின் கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (50-60) கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் மற்றும் மத்திய மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

எனவே, மேற்படி கடற்பரப்புகளில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-55 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது மிதமான கொந்தளிப்புடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.