சட்ட விரோதமாக வேறுநாட்டுக்கு செல்லமுற்பட்ட 5 பேர் தமிழர் பகுதியில் வைத்து கைது!

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக சட்ட விரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்ற 5 பேரை கடற்படையினர் கைது செய்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(18) தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இவர்களில் 3 ஆண்களும் 2 பெண்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் பேசாலை,வவுனியா மற்றும் திருகோணமலை போன்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

சட்ட விரோதமாக வேறுநாட்டுக்கு செல்லமுற்பட்ட 5 பேர் தமிழர் பகுதியில் வைத்து கைது! | Sri Lankan Refugees Going To India

குறித்த 5 பேரும் விசாரணைகளின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18) மாலை தலைமன்னார் காவல்துறையினரால் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.

இதன் போது 18 வயதிற்கு மேற்பட்ட 4 பேரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு, 16 வயது சிறுமியை சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக சிறுவர் காப்பகத்தில் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தலைமன்னார் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery Gallery

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.