அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட பணக்காரர்களுடன் கொழும்பை வந்தடைந்த கப்பல்

அமெரிக்காவின் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு “Ocean Odyssey” என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது. 105 மீட்டர் நீளமும் 18.5 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு துறைமுகத்தை குறித்த கப்பல் வந்தடைந்ததுடன் டிசம்பர் 19 ஆம் திகதி திருகோணமலை துறைமுகத்திற்கு பயணிக்கவுள்ளது.

இந்தக் கப்பலில் வரும் சுற்றுலாப் பயணிகள் கொழும்புத் துறைமுகத்தில் இறங்கி சொகுசு பேருந்துகளில் சுமார் இரண்டரை நாட்கள் கொழும்பு, குருநாகல், ஹபரணை, சிகிரியா, திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு சென்று எதிர்வரும் 21ம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் இருந்து கப்பலில் திரும்பிச் செல்லவுள்ளதாக “டேவ் மரைன்” கப்பல் முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்னர் டிசம்பர் 21ம் திகதி இரவு 7:00 மணிக்கு திருகோணமலை துறைமுகத்தில் இருந்து தாய்லாந்துக்கு கப்பல் புறப்பட உள்ளது.

அமெரிக்காவின் நூற்றுக்கும் மேற்பட்ட பணக்காரர்களுடன் கொழும்பை வந்தடைந்த கப்பல் | Ship Arrives With Americas Richest Tourists

 

கப்பல், கொழும்பு துறைமுகத்தை முதன்முறையாக வந்தடைந்ததைக் குறிக்கும் வகையில், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா மற்றும் கப்பலின் தலைவருக்கு இடையில் சம்பிரதாய ஒளிப் பரிமாற்றம் இடம்பெற்றது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு, துறைமுக அதிகாரசபை மற்றும் கப்பல் முகவர் நிறுவனத்தின் அதிகாரிகள் குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.