ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக டுபாய், ஓமானுக்கு சென்றிருந்த குழு நாடு திரும்பியது

ஆட்கடத்தல் தொடர்பான விசாரணைகளுக்காக டுபாய் மற்றும் ஓமான் நோக்கி பயணித்திருந்த விசாரணை குழு நாடு திரும்பியுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 02 அதிகாரிகளும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை சேர்ந்த 04 அதிகாரிகளும் கடந்த 10ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டிருந்தனர்.

இதேவேளை, சுற்றுலா விசா மற்றும் பணியகத்தில் பதிவு செய்து பணியாளர்களாக சென்று பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளான 30 பெண்கள் ஓமான் பாதுகாப்பு இல்லத்திலும் சுமார் 60 பேர் டுபாய் பாதுகாப்பு இல்லத்திலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.