நான்கு தூதுவர்கள் – இரண்டு பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு அனுமதி!

 

நான்கு தூதுவர்கள், இரண்டு வதிவிடப் பிரதிநிதிகளின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

அதற்கமைய, பிரான்ஸுக்கான இலங்கையின் புதிய தூதுவராக மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக நிரோஷனி மனீஷா டயஸ் அபேவிக்ரம குணசேகரவை நியமிப்பதற்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோன்று, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதியாக ஹிமாலி சுபாஷினி டி சில்வா அருணதிலகவை நியமிப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜேர்மனுக்கான புதிய தூதுவராக லங்கா வருணி முத்துகுமாரனவை நியமிப்பதற்கும், ஜோர்தானுக்கான புதிய தூதுவராக ஜே.ஏ.டி.எஸ். பிரியங்கிகாவை நியமிப்பதற்கும், வியட்னாமுக்கான புதிய தூதுவராக சஜீவ உமங்க மெண்டிஸை நியமிப்பதற்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது.

உயர் பதவிகள் பற்றிய குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் கூடியதுடன், அதன் உறுப்பினர்களான ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, தலதா அத்துகோரல, விஜித ஹேரத், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் உதய கம்மன்பில ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.