வீதியை அமைத்துத்தரக் கோரி சாவகச்சேரி பிரதேச செயலகம் முன்பாக போராட்டம்!

யாழ் சாவகச்சேரி கொடிகாமம்
J/320 கிராமசேவகர் பிரிவு மக்கள் 19/12/2022 சாவகச்சேரி பிரதேச செயலகதிற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்மராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட கொடிகாமம் கோயிலாமனை வீதி 60 வருடங்களுக்கு மேலாக புனரமைக்கப் படாதமையால் பெரும் அசௌகரிய நிலை ஏற்படுவதாகவும் மழை காலங்களில் வீதியினால் செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரால் கோயிலாமனை வீதி அமைப்பதற்கான பெயர் பலகை நாட்டப்பட்ட போதும் தற்போது அத்தப்
பெயர்ப்பலகை
அகற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

மக்கள் பாவனைக்கு ஏற்றவாறு வீதியை புனரமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை இதன்போது வலியுறுத்தியிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்