இந்த ஆண்டை விட அடுத்த ஆண்டு தொடக்கத்தில் டெங்குக் காய்ச்சல் பரவும் அபாயமுள்ளது-சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம்

இந்த வருடத்தை விட அடுத்த வருட ஆரம்ப காலப்பகுதியில் டெங்கு நோயாளர்கள் அதிகம் பதிவாகும் அபாயம் இருப்பதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தேசிய அமைப்பாளர் திஸ்னக திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பூச்சியியல் அதிகாரிகள் வழங்கும் தரவுகள் முறையாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதில் சிக்கல் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. எனவே டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்க கொள்கையொன்று தயாரிக்கப்பட வேண்டுமென சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.