இன்று முதல்10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..!

10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க நிதி அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இந்த தகவலை நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுற்றுலாத் துறைக்கான சக்தி பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக சிசி டீவி மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

இன்று முதல்10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..! | Import Restrictions Imposed Removal 10 Items

இன்று (20) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்