சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு – வீட்டு மதிலை இடித்து உள்நுழைந்த பேருந்து..!

பேருந்து சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளாகி சாரதியொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(20) காலை இடம்பெற்றுள்ளதாகவும் கஹதுடுவ பிரதேசத்தை சேர்ந்த கபில பெரேரா (வயது 54) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டாவ பிலியந்தலை 342 பேருந்து வழித்தடத்தில் இயங்கும் குறித்த பேருந்து , கொட்டாவ பேருந்து நிலையத்தில் இருந்து முதல் பயணத்தை ஆரம்பிப்பதற்காக இன்று (20) அதிகாலை 5.45 மணியளவில் சென்று கொண்டிருந்த போது சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

 

மாரடைப்பின் போது பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் சாலையை விட்டு விலகி மாத்தேகொட பகுதியில் உள்ள வீட்டு மதிலை இடித்து உள்நுழைந்துள்ளது.

வீட்டிற்குள் நுழையாது பேருந்து நிறுத்தப்பட்டதால் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், சம்பவத்தின்போது வீட்டிற்குள் தம்பதியரும் குழந்தையும் இருந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.